News April 8, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 06.04.2026 காலை 6.00 மணி முதல் 07.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

தருமபுரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04342-232720 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

தருமபுரியில் 3 பிரச்சனைகள்: செளமியா அன்புமணி

image

தருமபுரியில் சௌமியா அன்புமணி நேற்று அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தருமபுரி மாவட்டத்திற்கு 3 முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று குடிநீர் பிரச்சனை, 2-வது வேலை வாய்ப்பின்மை (ம) மது போதை சீரழிவு. இதை அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த 3 முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

News April 8, 2026

தருமபுரி: அதிமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் கொமதேக

image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் தலைமையில், தருமபுரி (ம) கிருஷ்ணகிரி மாவட்ட ஆதரவாளர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் திரளாக விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, கொமதேக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாவட்டங்களில் அரசியல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

error: Content is protected !!