News January 19, 2026

பர்சனல் லோன் வேணுமா? முக்கிய அறிவிப்பு

image

‘உங்களுக்கு ₹10 லட்சம் Pre-approved Loan அப்ரூவ் ஆகியுள்ளது’ என்று உங்களில் பலருக்கும் போனில் மெசேஜ் வந்திருக்கலாம். அப்படி வந்தால், ஆஹா லோன் கிடைத்துவிட்டது என்று உடனே அப்ளை செய்துவிடாதீர்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவசரப்பட்டு எந்த ஒரு லோன் ஆஃபரையும் உடனே ஏற்க வேண்டாம். நிபந்தனைகளை முழுமையாகப் படித்து, வட்டி & EMI விவரங்களை உறுதி செய்தபின் ஏற்பதே பாதுகாப்பானதாம். SHARE IT!

Similar News

News January 26, 2026

பழமா… ஜூஸா? எது பெஸ்ட் தெரியுமா?

image

பழங்களில் இயற்கை சர்க்கரையும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ஆனால், அதனை ஜூஸ் ஆக்கும்போது நார்ச்சத்துக்கள் உடைகின்றன. ஒரு கிளாஸ் ஜூஸுக்கு இரண்டு, மூன்று பழங்களை பிழிவதால் அளவுக்கதிகமான சர்க்கரை உடலில் சேர்கிறது. பழங்களை அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள கலோரிகளில் 10% அதனை செரிமானம் செய்ய காலியாகிவிடும். ஆனால், ஜூஸாக குடிக்கும்போது அத்தனை கலோரியும் உடலில் சேர்ந்து தீங்கு விளைவிக்கிறது.

News January 26, 2026

சிக்கன் விலை குறைந்தது

image

கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், கடந்த வாரம் சிக்கன் கிலோ ₹320 வரை விற்கப்பட்டது. தற்போது, அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால், விலை குறையத் தொடங்கியுள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ₹155-ல் இருந்து ஒரே வாரத்தில் ₹120 ஆக சரிந்துள்ளது. இதனால், கடைகளில் சிக்கன் கிலோ 240-க்கு கீழ் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் விலை என்ன?

News January 26, 2026

ராகுல் காந்திக்கு 3-வது வரிசை.. கொந்தளித்த காங்கிரஸ்

image

குடியரசு தின அணிவகுப்பில் தங்களது தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் கார்கேவுக்கு 3-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு வேண்டுமென்ற காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட அரசாங்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

error: Content is protected !!