News November 20, 2024

பருவமழை அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் தேவைப்படும் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நபர்கள் 1077, 04366-226623 மற்றும் 9488547941 (வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News September 15, 2025

திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

image

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News September 15, 2025

திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News September 15, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!