News October 9, 2024
பருவமழையை எதிர்கொள்ள தயார் – கலெக்டர்

வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு, அவசர தேவைக்காக 330 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்கு 1077 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும், டிஎன் – ஸ்மார்ட் செயலியை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 8, 2025
நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்கு விருது

நாமக்கல் மாவட்டம், நேற்று(07/09/25) ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விருதினை காவல்துறை இயக்குநர் (பொ) வெங்கட்ராமனிடம் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் விருது மற்றும் பரிசுகளை பெருமையுடன் பெற்றுக்கொண்டார். இதில் நாமக்கல் காவல்துறை பெருமையடைந்துள்ளனர்.
News September 8, 2025
நாமக்கல்: இபிஸ் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது சில தவிர்க்க முடியாத காரணத்தால் 19, 20, 21 ஆகிய மூன்று தேதிகளில் சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நகரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளார்.
News September 8, 2025
நாமக்கல்: ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

நாமக்கல், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி நடைபெற உள்ளது. உணவு, உடை, தங்குமிடம் திருக்கோயில் மூலம் வழங்கப்படும். முழுநேரம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10000 (ம) பகுதிநேர மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 முதல் 24 ஆகும். விபரங்களுக்கு 04286233999 தொடர்பு கொள்ளலாம். SHARE IT!