News August 4, 2024
பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, ஈரோட்டில் உள்ள 7,43,181 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News August 14, 2025
ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.
News August 13, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.