News March 5, 2025
பருத்தி உற்பத்தியில் தேனி மாவட்டத்தின் பெருமை

தேனி, தென்னிந்தியாவின் 2வது மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பருத்தி வர்த்தகம், தொழில்துறையின் வளர்ச்சியே ஆகும். தேனியில் மிகவும் மென்மையான, சிறந்த தரமான பருத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேனியின் பருத்திகள் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் பருத்தி பொருட்களுக்கு போட்டியாக இருக்கும்.*உங்கள் ஊரின் பெருமையை பிறக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 10, 2025
தேனி: லாரி மோதி முதியவர் பலி

அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த மனோகரன் (67) தனது மகள் கீா்த்தனா, பேத்தி சிவதா்சினி, மகன் கவிபாரதி உள்ளிட்ட 7 பேருடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் நேற்று (நவ.9) தேனிக்கு சென்றாா். தேவதானப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் காா் மீது மோதியதில் காரில் பயணித்த 7 பேரும் படுகாயமடைந்த நிலையில், மனோகரன் உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 10, 2025
தேனி: சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்; கிராம மக்கள்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் மனமகிழ் மன்ற பார்க்கு அனுமதி வழங்க கூடாது என ஒட்டு மொத்த கிராம மக்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அப்படி அனுமதித்தால் வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பெரிய பேனர்களை ஆங்காங்கே வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News November 9, 2025
தேனி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோ திருட்டு

பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசக்திவேலன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உப்பார்பட்டி செல்லவேண்டும் என கூறவே. ஆட்டோவில் சென்று கொண்டி இருந்த போது இடையில் ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலனை தாக்கி 3பேரும் ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


