News September 29, 2024
பரிசளிப்பு விழா ஒத்திவைப்பு -ஆட்சியர்
தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இன்று நடைபெற இருந்த முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சியானது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
வனவிலங்கு கண்காணிப்பு குழுவில் தென்காசியைச் சேர்ந்தவர்கள்
தமிழக அரசு நெல்லை வனவிலங்கு சரணாலயம் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைவராகவும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் சிவகிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த தாசில்தார்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர் ராஜாராம், பராசக்தி கல்லூரி பேராசிரியர் செல்வி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 20, 2024
செங்கோட்டை அருகே இலவச பயிற்சிக்கு அழைப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
News November 20, 2024
குண்டாறு அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை!
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.,19) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக, செங்கோட்டையில் உள்ள குண்டார் அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 7 மி.மீட்டர் மழையும், கருப்பா நதியில் 9 மி.மீட்டர், ராமநதியில் 12 மில்லி மீட்டர், கடனா அணையில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.