News November 22, 2024
பராமரிப்பு பணி காரணமாக 28 ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து புறப்படும் 14 ரயில்கள், தாம்பரத்தில் இருந்து புறப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற 200 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுவதைவிட 5 – 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 8, 2025
செங்கல்பட்டுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News August 8, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

இன்று செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 7, 2025
சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.