News September 23, 2024
பராமரிப்பு பணி காரணமாக இரவு நேர ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை (செப்.24) இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் புறப்பட்டு, தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
சென்னை: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News September 15, 2025
சென்னையில் சொந்த வீடு இருக்கா?

சென்னையில் செப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு வாயிலாகவும் மற்றும் What’s App வாயிலாக 9445061913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.
News September 15, 2025
ராயப்பேட்டை: ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு

ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.