News December 25, 2025
‘பராசக்தி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால், படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.
Similar News
News December 26, 2025
நடிகை மீனாவின் மகள் PHOTO

தமிழ் சினிமாவில் மீனாவுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருக்கிறது. இப்போது கிறிஸ்துமஸையொட்டி மீனா தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த நிலையில், நைனிக்காவுக்கு பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகியுள்ளது. ‘தெறி’ படத்தில் வந்த விஜய்யின் சுட்டிக் குழந்தையா இது என பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். மேலும், அவருக்கு ஹீரோயினாகும் அத்தனை அம்சங்களும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 26, 2025
சற்றுமுன்: விலை ₹8,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் டிசம்பர் மாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹11,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News December 26, 2025
PMK-வில் அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே: G.K.மணி

பாமகவில் இருந்து தன்னை நீக்குவதாக அன்புமணி அறிவித்ததற்கு G.K.மணி பதிலடி கொடுத்துள்ளார். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி எப்படி தன்னை நீக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். கட்சியில் ஒருவரை இணைப்பதற்கும் நீக்குவதற்கும் முழு அதிகாரம் பெற்றவர் ராமதாஸ் மட்டுமே எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அன்புமணி – ராமதாஸ் இடையேயான மோதல் போக்குக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.


