News January 9, 2026

பராசக்தி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

image

‘பராசக்தி’ படத்திற்கு <<18807276>>U/A சான்றிதழ்<<>> கிடைத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி நாளை ரிலீஸாகிறது. தணிக்கை வாரியத்தின் உத்தரவுப்படி <<18808879>>25 திருத்தங்களுடன்<<>> படம் ரிலீஸாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

Similar News

News January 27, 2026

வேலைக்காக படுக்கைக்கு அழைப்பு: சின்மயி பகீர் புகார்

image

திரைத்துறையில் வாய்ப்புக்காக பெண்களிடம் ‘பாலியல் உறவை’ எதிர்பார்க்கும் சூழல் இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்திருந்தார். இதை மறுத்துள்ள சின்மயி, இத்துறை கண்ணாடி அல்ல, சம்மதிக்க மறுத்தால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். மேலும், சிரஞ்சீவியின் காலத்தில் பெண் கலைஞர்கள் மதிக்கப்பட்டார்கள், ஆனால் தற்போது கமிட்மென்ட் என்ற பெயரில் வேலைக்கு பாலியல் உறவை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News January 27, 2026

வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது அல்ல: எலான் மஸ்க்

image

உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை ரகசியமாக யாராவது படித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது உண்மை தான் என்கிறார் எலான் மஸ்க். வாஸ்ட்ஆப் உரையாடல்களை மெட்டா நிறுவனம் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மெட்டா, என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் மெசேஜ்கள் பாதுகாப்பானவை என வாதிட்டது. இதுபற்றி கமெண்ட் செய்த மஸ்க், வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்றது என்று கூறியுள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 27, 2026

தவெக கூட்டணியில் ராமதாஸ்?

image

NDA கூட்டணியில் அப்பாவை இணைக்கக் கூடாது என அன்புமணி நிபந்தனை வைத்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக் கூடாது என்று விசிக முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாள்களில் செங்கோட்டையன் மூலம் ராமதாஸை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு பலம் சேர்க்குமா?

error: Content is protected !!