News December 14, 2025

பராசக்தியை தனுஷிடம் இருந்து பறித்தாரா SK?

image

தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என கூறி வந்தாலும், தனுஷ்-SK இடையே மோதல் இருப்பதாகவே சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், SK நடித்துள்ள பராசக்தி படத்தில் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டதாக பேச்சு எழுந்துள்ளது. சூர்யா விலகிய பின், ‘இதில் நடிக்கிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என தனுஷ், சுதா கொங்கராவிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அதற்குள் SK படத்தை தட்டிப் பறித்துவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Similar News

News March 3, 2026

திமுகவை மிரட்டும் காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

image

2026 தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இன்றி வெற்றிபெற முடியாத பலவீனமான நிலையில் திமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். அதனால் தான், CM ஸ்டாலின் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார் என பேசியுள்ளார்.

News March 3, 2026

SPORTS 360°: கேட்ச் பிடிப்பதில் இந்தியா மோசமான சாதனை

image

*போர் காரணமாக ZIM, WI கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் * போர் பதற்றத்தால் கூடைப்பந்து WC குவாலிஃபையர் போட்டிகளை FIBA ஒத்திவைத்துள்ளது *நடப்பு டி20 WC தொடரில் இந்திய வீரர்கள் 13 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர் *இன்று தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், உன்னதி ஹூடா, மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர் பங்கேற்பு

News March 3, 2026

CINEMA 360°: தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீஸ்

image

*தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *’ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்’ படத்தில் நடித்த டாம் ஹோலண்ட்- ஜெண்டயா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கசிந்துள்ளது *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள RAI RAI RAA RAA பாடல் வெளியானது

error: Content is protected !!