News January 9, 2026
பராசக்திக்கு U/A சான்றிதழ்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 15 இடங்களில் கட் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியிருந்தது. தற்போது தணிக்கை சான்றிதழ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை ரிலீசாகிறது. மேலும், தமிழகம் முழுவதும் ’பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
Similar News
News February 10, 2026
திமுகவில் இணைந்தார்.. அதிமுகவுக்கு ஏமாற்றம்

கொங்கு மண்டலத்தில் திமுகவினரை இழுக்க அதிமுகவும், அதிமுகவினரை இழுக்க திமுகவும் போட்டிப் போட்டு வருகின்றன. குறிப்பாக கரூரில் இந்த விவகாரம் அனல் பறக்கிறது. கடந்த 8-ம் தேதி திமுக மாவட்ட நிர்வாகியும், Ex கவுன்சிலருமான பசுவை கி.வடிவேல் MR விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஒரே நாளில் மனம் மாறிய அவர், இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமானது பேசுபொருளாகியுள்ளது.
News February 10, 2026
எங்கே செல்லும் ராமதாஸின் பாதை?

ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த ராமதாஸின் நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. விசிகவால் திமுகவிலும், அன்புமணியால் அதிமுகவிலும் இணையமுடியாமல் இருக்கும் அவரது தரப்பு, சீமானிடமும் விஜய்யிடமும் அப்ரோச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களோ அதனை மறுத்திருக்கின்றனராம். இதனால் ராமதாஸ் தரப்பினர் தேர்தலை எண்ணி மனஉளைச்சலில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
News February 10, 2026
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

<


