News September 2, 2025
பரவும் அமீபா காய்ச்சல் கோவை சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

மூளையை தின்னும் அமீபா தொற்று தொடா்பாக கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்று தேங்கியிருக்கும் தண்ணீரின் மூலம் பரவும் என்பதால் குழந்தைகளை தேங்கி நிற்கும் தண்ணீா், முறையாக பராமரிக்காத குளங்களில் நீந்தவும், குளிக்கவும், விளையாடவும் பெற்றோா் அனுமதிக்க வேண்டாம். இதுவரை கோவையில் யாருக்கும் அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 2, 2025
கோவை: தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 2, 2025
நாய்க்குட்டியை துன்புறுத்திய பெண் மீது வழக்கு!

கோவை, கவுண்டம்பாளையத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நாய்க்குட்டியை முட்புதரில் வீசி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து விலங்குகள் நலத் தன்னார்வலர் பிரியா, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் நேற்று (செப்டம்பர் 1) அப்பெண் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 2, 2025
BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!

கோவையின் மையத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அருகிலேயே கோவை எஸ்பி அலுவலகம், சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில் இன்று 3ஆம் முறையாக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.