News December 17, 2025
பரமத்தி வேலூர்: ஆற்றில் வந்த வாலிபர் சடலம்

பரமத்தி வேலூர் அருகில் அமைந்துள்ள சோழசிராமணி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் காவிரி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையம் அருகே கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
BREAKING: நாமக்கல்லில் 1 லட்சம் வாக்களர்கள் நீக்கம்!

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். நாமக்கல் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் இறந்த வாக்காளர்கள்,வேறு முகவரிக்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள், மற்ற இனங்கள் என ஆக மொத்தம் 1,93,706 வாக்குகாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக குமாரபாளையம் தொகுதியில் 20.07 சதவீதம் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


