News January 11, 2026

பரமத்தி வேலூர் அருகே பயங்கரம்

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்திக்காட்டைச் சேர்ந்த ராசம்மாள் (73) என்ற மூதாட்டியை, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வாயில் துணியை அடைத்து, கை கால்களைச் சேலையால் கட்டிப்போட்டனர். பின்னர் அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்கச் செயின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

நாமக்கல் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாமக்கல் மாவட்ட மக்கள் 04286281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 5, 2026

நாமக்கல்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 5, 2026

நாமக்கல்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!