News January 17, 2026
பரமக்குடி: மணி மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்

பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் மணி மண்டபத்தை இன்று (ஜன.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், சாமிநாதன் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எம்எல்ஏக்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, ராஜா இருந்தனர்.
Similar News
News February 5, 2026
ராம்நாடு : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

இராமநாதபுரம் மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.
News February 5, 2026
இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.


