News September 18, 2025
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
ராம்நாடு : கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT
News April 3, 2026
ராம்நாடு : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 3, 2026
ராம்நாடு : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை தொகுதியில் ராம கருமாணிக்கம் போட்டியிடவுள்ளார்.


