News December 11, 2025

பரமக்குடி கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி

image

திருப்பூரை சேர்ந்த ராஜ்குமா் நேற்று முன்தினம் தனது குடும்பதினருடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார்.எதிரில் பரமக்குடியில் இருந்து மானாமதுரை நோக்கி மற்றொரு காரில் சீனிவாசன் தனது மகளுடன் சென்றார் சீனிவாசன் முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது மீடியன் மீது ஏறி எதிரே வந்த ராஜ்குமார் காருடன் மோதியது. விபத்தில் சீனிவாசன் இறந்தார். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த ராஜ்குமார் சகோதரி அம்பிகா இறந்தார்.

Similar News

News December 14, 2025

பரமக்குடி அருகே ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட பணி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ் காவனூரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் உடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 14, 2025

ராமநாதபுரம்: ஒரே நாளில் 1415 வழக்குகளுக்கு தீர்வு

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு லோக் அதலாத் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள சிவில், வங்கி வாராக் கடன்கள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 2768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1415 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

News December 14, 2025

ராமநாதபுரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!