News May 23, 2024

பரமக்குடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து மாலை திடீரென கரு‌ மேகங்கள் சூழ்ந்து பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News April 21, 2025

இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

image

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

image

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 21, 2025

700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

image

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!