News May 17, 2024
பரந்தூர்: 661வது நாளாக இரவு நேர போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் 2வது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து அப்பகுதியில் வாழும் 13 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசை கண்டித்து 661வது நாளாக நேற்று(மே 16) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Similar News
News December 31, 2025
காஞ்சிபுரம்: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News December 31, 2025
அறிவித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ரேஷன் பொருட்களை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.
News December 31, 2025
காஞ்சி: தீப்பிடித்து எரிந்த கார்; நூலிழையில் தப்பிய குடும்பம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் டேனியல். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பிள்ளைப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதையறிந்த அனைவரும் காரில் இருந்து இறங்கி தப்பித்தனர். கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


