News March 29, 2025
பயிர் விளைச்சலில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொகை

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி இன்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டார். இதில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு பரிசு தொகையினை வழங்கினார்.
Similar News
News April 1, 2025
புதுக்கோட்டை ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 7ஆம் தேதி தேர்வுகள் மற்றும் அவசர பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
News April 1, 2025
உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது புதுகை மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சித்தன்னவாசல், 2.மலையடிபட்டி குகைகோயில், 3.புதுகை அருங்காட்சியம், 4.நார்த்தாமலை குடவரை கோயில், 5.திருமயம் கோட்டை போன்ற இடங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..