News October 25, 2024
பயிர் காப்பீடு திட்டம் தொடர்பு எண்கள் அறிவிப்பு

நெல்லை விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 14447 தொடர்பு கொள்ளலாம். விரிவான விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இது குறித்தான விபரங்களுக்கு மாவட்ட அளவில் 0462-2572514 (அ) வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு சந்திரபோசை (9500982980) அணுகலாம் என கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.24) தெரிவித்தார்.
Similar News
News August 24, 2025
உழவர் சந்தை அங்காடி ஏலம் அறிவிப்பு

மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் உள்ள சிறப்பு அங்காடிகளை இயக்குவதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் 03.09.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு விடப்பட உள்ளது . திருநெல்வேலி விற்பனைக் குழு அலுவலகத்தில் அதே நாள் பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு தலைமையில் நடைபெறும்.
News August 24, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 24, 2025
நெல்லைக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்