News October 22, 2025

பயிர்காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 – ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

விருதுநகரில் ஊராட்சி துறையில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் நவ.9 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News October 22, 2025

விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா..!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

image

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!