News June 28, 2024
பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அழைப்பு

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிரை பொறுத்து அவர்கள் கடன் தரும் வங்கிகள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தர்மபுரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

தர்மபுரி, காரிமங்கலத்தில் அரசு பதிவு பெறாமல் இயங்கிவந்த 32 செங்கல் சூளைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு புவியியல் & சுரங்கத்துறையின் இணையதளத்தில் செப்.,3-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூளைகள் இணையதளத்தில் பதிவு செய்யாததால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் இந்த சூளைகளை சீல் வைக்க காரிமங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தருமபுரி மாணவிகள் சாதனை

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தனியார் கல்லூரி மாணவி நர்மதா மாநில அளவில் மூன்றாம் இடமும், ரோஜா மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதார துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
News September 10, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.10) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க