News June 27, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

காரைக்கால் கூடுதல் வேளாண்மை இயக்குநர் அலுவலகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காரைக்காலில் தற்போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது குறுவை பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 30.06.2024-வரை சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை 15.07.2024-க்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

புதுச்சேரி: பிரதமரை சந்தித்து மாநில செயலாளர் மனு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், புதுச்சேரி பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குதல், 1963 யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் செய்து கூடுதல் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் அளித்தல், நிலுவையில் உள்ள கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவை வலியுறுத்தினார்.

News March 2, 2026

புதுச்சேரியில் பொதுத்தேர்வுகள் தொடக்கம்

image

தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையில் +2 தோ்வு புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இத்தோ்வினை 7,585 மாணவா்கள் எழுதுகிறாா்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகள் மாணவா்கள் சிபிஎஸ்இ பொதுத்தோ்வை எழுதி வருகின்றனா். புதுச்சேரி காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளிகள் மட்டும், தமிழக பாடதிட்டத்தை பின்பற்றி வருகின்றன. தமிழக பாடத்திட்ட பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

News March 2, 2026

புதுச்சேரி: அதிகாரிகளுக்கு முக்கிய பயிற்சி

image

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்த காணொளி வழிப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவத்தினர் மற்றும் அரசுப் பணியாளர்கள் போன்ற சேவை வாக்காளர்களின் விபரங்களைப் பதிவு செய்தல் மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கப்பட்டது.

error: Content is protected !!