News October 10, 2024

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, நேற்று ஆற்காடு வட்டம். புதுப்பாடி கிராமம், சரஸ்வதி மஹாலில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 248 பயனாளிகளுக்கு ரூ.66.40 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் திரு. இராஜராஜன் இருந்தனர்.

Similar News

News November 11, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் நேரில் ஆய்வு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (11.11.2025) அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்க நகராட்சி நேதாஜி நகர் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வருவதை ஆய்வு செய்தார்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News November 11, 2025

ராணிப்பேட்டை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE IT)

error: Content is protected !!