News November 10, 2025
பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த யூடியூப் நிறுவனம்!

யூடியூப் Ad-களை தவிர்க்க, பலரும் Ad blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூஸர்களுக்கு யூடியூப் நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. Ad blocker யூஸ் பண்ணுவோர் இனி யூடியூப்பில் வீடியோவே பார்க்க முடியாது. தனது புதிய அப்டேட்டில் Ad blocker இருப்பதை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள யூடியூப், அவர்களுக்கு சேவை வழங்குவதையும் நிறுத்துகிறது. Ad blocker-ஐ எடுத்தால் மட்டுமே, வீடியோ பார்க்க முடியும்.
Similar News
News November 10, 2025
சுத்தமான காற்று.. டாப் 10 நகரங்கள்

இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சில நகரங்களில் காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், சில நகரங்களில் காற்று சுத்தமாகவும் சுவாசிக்க பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எந்தெந்த நகரங்கள் சுத்தமான காற்றுடன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
News November 10, 2025
பிரபல நடிகர் கவலைக்கிடம்… வென்டிலேட்டரில் சிகிச்சை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும், நடிகை ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திராவின்(89) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் நவ.1-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திராவின் உடல்நிலையை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
News November 10, 2025
RR அணியின் புதிய கேப்டன் யார்?

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் CSK வாங்கவுள்ளதாக காட்டுத்தீ போல செய்தி பரவி வருகிறது. அப்படி சென்னைக்கோ, வேறு அணிக்கோ சஞ்சு சென்றால் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுகிறது. ஜெய்ஸ்வால் (அ) துருவ் ஜுரலை கேப்டனாக நியமிக்க, RR அணி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக் பெயர் பரிசீலனையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.


