News March 27, 2026

பயந்து சாகிறார் விஜய்: கீதாஜீவன்

image

கட்சி தொடங்கி 1 வருடமே ஆனவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த CM என பேசுவதாக கீதாஜீவன் கூறியுள்ளார். பாஜக என சொல்லக்கூட விஜய் பயந்து சாவதாக கூறிய அவர், ஜனநாயகன் படத்துக்காக கூட குரல் கொடுக்காதவர் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவார் என கேட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறும் விஜய் தன் மனைவி, பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 8, 2026

BREAKING: பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம்

image

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் 2.557 புள்ளிகள் உயர்ந்து 77,174 புள்ளிகளிலும், நிஃப்டி 753 புள்ளிகள் உயர்ந்து 23,876 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. சுமார் 15 லட்சம் கோடி அளவுக்கு லாபத்துடன் சந்தைகள் தொடங்கியுள்ளதால் இன்றைய தினம் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

News April 8, 2026

தர்பூசணியில் இதையும் சாப்பிடலாம்..

image

சம்மரில் பலரும் வீடுகளில் தர்பூசணி வாங்கி சாப்பிடுவோம். அந்த பழம் மட்டுமல்ல; அதன் தோலும் குளிர்ச்சி தரக்கூடியதுதான். அதன் பச்சை பகுதியை மட்டும் நீக்கிவிட்டால் பொரியல், சாலட், ஜூஸ், ஊறுகாய் என பல டிஷ்களை செய்யலாம். வழக்கமான காய்கறி போலவே இதையும் பொரியல் செய்து சாப்பிடலாம். கேரட், வெள்ளரியுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். புதினா, லெமன் சேர்த்து ஜூஸ் அடித்து குடிக்கலாம். SHARE

News April 8, 2026

அதிமுகவுடன் இணைந்தனர்.. திமுக கூட்டணி ஷாக்

image

அரசியல் சதுரங்க விளையாட்டில் கடைசி நேர ஆட்டம் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில், கொமதேக கொள்கை பரப்புச் செயலாளர் அசோகன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

error: Content is protected !!