News December 31, 2025
பயத்தில் சத்தியமங்கலம் மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் சாலையில் சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது. வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
Similar News
News February 5, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (5.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
ஈரோட்டில் இங்கு மின்தடை அறிவிப்பு!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (பிப்.07) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, முருங்கத்தொழுவு, நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், அய்யம்பாளையம், கொடுமணல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 5, 2026
ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


