News November 29, 2025

பயணிகள் கவனத்திற்கு! 250 விமானங்களின் சேவை பாதிப்பு

image

ஏர்பஸ் ஏ320 விமானங்களில் ஏற்பட்ட சாப்ட்வேர் கோளாறு காரணமாக, இந்தியாவின் முன்னணி விமான சேவைகளான இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 250 ஏ320 ரக விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சில விமானங்கள் தாமதமாக புறப்படும், சில ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

சற்றுமுன்: விலை மொத்தம் ₹13,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹196-க்கும், கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து ₹1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவ.29-ம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி விலை ₹9000, டிசம்பர் மாதத்தில் முதல் நாளான இன்று ₹4000 என 2 நாள்களில் மொத்தம் ₹13,000 அதிகரித்துள்ளது.

News December 1, 2025

நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

News December 1, 2025

திருமாவுக்கு சீக்ரெட் அசைன்மெண்ட்: வானதி சாடல்

image

செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறும் திருமாவுக்கு வானதி சீனிவாசன் கவுண்ட்டர் அட்டாக் கொடுத்துள்ளார். NDA கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும், மக்கள் மத்தியில் தங்களை பலவீனமாக காட்டவேண்டும் என்றே திருமா அப்படி பேசுவதாக கூறிய அவர், இது அவருக்கு வழங்கப்பட்ட அசைன்மெண்ட் என கூறியுள்ளார். மேலும், மக்களிடம் அதிக வாக்குகள் வாங்கி, ஆட்சி அமைப்பது மட்டுமே எங்களுடைய அசைன்மெண்ட் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!