News March 2, 2026

பயணிகளுக்கு தொல்லை: திருநங்கைகள் மீது வழக்கு பதிவு

image

சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரையில்) 41திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.25,830 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் செயல்பட கூடாது என திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

ராயபுரம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 11, 2026

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

image

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News March 11, 2026

சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

image

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!