News January 19, 2026
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாட்ரோ என்ற பகுதியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது ஒரு ராணுவ ஹவில்தார் வீரமரணமடைந்த நிலையில் மேலும் 8 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
முதல் முறை வாக்காளர்களை கொண்டாடுங்கள்: PM மோடி

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஒரு புனிதமான அரசியலமைப்பு சிறப்புரிமை மட்டுமல்ல எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கடமை எனக் கூறியுள்ளார். முதல் முறையாக வாக்குரிமை பெற்றுள்ள இளைஞர்களை ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், வாக்காளராக ஒருவர் மாறுவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
News January 25, 2026
BIG NEWS: டிடிவி தினகரன் விலகுவதாக அறிவித்தார்

ஆண்டிபட்டியில் போட்டியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த <<18948139>>TTV தினகரன்<<>>, திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார். தனியார் TV-க்கு அளித்த நேர்காணலில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து விசாரித்தபோது, வரும் தேர்தலில் ஆண்டிபட்டியில் தனது மனைவி அனுராதாவை களமிறக்க TTV திட்டமிட்டுள்ளாராம். 2024 LS தேர்தலின்போது தேனி தொகுதியில் களமிறங்கிய TTV-க்கு அனுராதா தீவிர பிரசாரம் செய்தார்.
News January 25, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


