News November 22, 2025
பனையூரை ஃபோகஸ் செய்யும் அமித்ஷா.. பின்னணி என்ன?

அமித்ஷா டிசம்பர் இறுதிக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விசிட்டில் கூட்டணி, சீட் ஷேரிங் பற்றி இறுதி செய்வதோடு, தவெக தரப்பிடம் கூட்டணி பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 3 நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். அமித்ஷா பேச்சுவார்தை நடத்தினால், விஜய் கூட்டணிக்கு பிடிகொடுப்பாரா?
Similar News
News February 12, 2026
மனைவியை நண்பர்களுக்கு ₹1,000-க்கு விற்ற கணவன்!

தன்னை கடைசி வரை கண் கலங்காமல் காப்பாற்றுவான் என எதிர்பார்த்த கணவனே, அவரது நண்பர்களுக்கு ₹1,000-க்கு தன்னை விற்று விட்டதாக மனைவி ஒருவர் உ.பி., போலீசில் புகார் அளித்துள்ளார். கணவனின் நண்பர்கள் பால்கிஷன் & பப்பு ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது பால்கிஷன் & பப்பு கைதான நிலையில், அந்த கொடூர கணவன் சுட்டன் தலைமறைவாகி இருக்கிறார். So Sad!
News February 12, 2026
திருச்சியில் மையம் கொள்ளும் மத்திய அமைச்சர்கள்!

2 நாள் பயணமாக அமித்ஷா நாளை திருச்சி வருகை தரவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரும், பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலும் வரவுள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் இவர், வரும் தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், பிரேமலதா, OPS ஆகியோரை சந்தித்து பியூஷ் கோயல் பேச உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News February 12, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது!

தங்கம் விலை இன்று(பிப்.12) சவரனுக்கு ₹1,520 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹190 குறைந்து ₹14,600-க்கும், சவரன் ₹1,16,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் காலையில் சற்று உயர்ந்த தங்கம் தற்போது சரிவை நோக்கிச் செல்வதால் இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


