News May 16, 2024
பனைமரத்தின் மீது கார் மோதி விபத்து

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 13, 2026
தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

பாலக்கோடையை சேர்ந்த பெண்ணுக்கு (23) தருமபுரியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் தனது பெண் குழந்தையோடு (3) அய்யப்பனுடன் வசித்து வந்தார். ஆனால் அய்யப்பன் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் இருவரையும் வீட்டுக்குள் பூட்டியும் கொடுமைபடுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
, அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை

இன்று காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் ஒரு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள்
தகுதி வாய்ந்த B.V.Sc படித்து (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போலி கால்நடைமருத்துவர்கள், பராம்பரிய வைத்தியர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.எனத தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.


