News September 19, 2025

பனைமரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

image

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மாவட்ட குழுவின் முடிவே இறுதியானது. அனுமதி பெற்ற பின்னரே மரத்தை வெட்ட வேண்டும்.

Similar News

News September 19, 2025

சென்னை அம்மா உணவக பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

image

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள் 65 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக அம்மா உணவக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 19, 2025

சென்னை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

image

சூளைமேட்டை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஹாரிஸ் என்பவருடன் 02.02.25 திருமணமானது. பெற்றோர் 100 சவரன் தங்க நகை கொடுத்தும், ஹாரிஸ் மற்றும் தாயார் 200 சவரன், 2 கிலோ வெள்ளி, நிலம் கேட்டு கொடுமைப்படுத்தி அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றி, பின் அவர் வீட்டிலும் சென்று சங்கீதாவை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு குழு விசாரணையில் ஹாரிஸ் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைத்தனர்.

News September 19, 2025

சென்னை: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!