News February 15, 2026

பனிமூட்டம் அலர்ட்.. உங்க பகுதியில் எப்படி இருக்குது?

image

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், வரும் 19-ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை முதல் 19-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் காலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் பனியின் தாக்கம் எப்படி உள்ளது?

Similar News

News February 16, 2026

சபரிமலையில் பெண்கள்.. வழக்கில் புதிய உத்தரவு

image

கோயில்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளை விசாரிக்க SC-ன் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் மீது ஏப்.7 முதல் 22-ம் தேதி வரை விசாரணை நடத்தும். இந்த வழக்குகளோடு சேர்த்து, தர்காவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாதது உள்ளிட்ட வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.

News February 16, 2026

காங்கிரஸுக்கு குட்டு வைத்த வைகோ

image

திருக்குறளை ஹிந்தியில் எழுதி வைத்து வாசிப்பதன் மூலம் ஏதோ தமிழர்களை மதிப்பதாக மோடி வேஷம் போடுகிறார் என வைகோ விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்; அப்போது கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது என கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்பது என்பது காங்கிரஸ் உரிமை, ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News February 16, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது!

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE

error: Content is protected !!