News September 8, 2025
பந்தலூர் அருகே கேரள அரசு பஸ் மோதி இளைஞர் பலி

பந்தலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் இன்று காலை வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் சென்ற வழியில் வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட அரசு பஸ் எதிர்பாரத விதமாக மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்ட விசாரணையில் உள்ளனர்.
Similar News
News September 9, 2025
நீலகிரி: ரூ.20 லட்சம் கடன், ரூ.6 லட்சம் மானியம் !

நீலகிரி மக்களே வேளாண் பட்டதாரிகளுக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3லட்சம் முதல் ரூ. 6லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தகுதிகள்: வயது 20-45, கல்வி: தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் திட்ட அறிக்கையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள், விண்ணப்பிக்க இங்கு<
News September 9, 2025
நீலகிரியில் வங்கி வேலை விண்ணப்பியுங்க.

நீலகிரி: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 9, 2025
நீலகிரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.