News October 15, 2025
பந்தலூரில் முற்றிலும் இலவசம்!

பந்தலுார்: உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட்ட, மேசன், எலக்ட்ரீசியன், பெயிண்டர் போன்ற பணிகளுக்கான பயிற்சியும், தினசரி காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு நாள்தோறும், ரூ.800 உதவித் தொகையுடன் ஏழு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் பயிற்சி பெற்று அரசு சான்றிதழை பெறுவதற்கு, பயிற்சிக்கு நேரில் அணுகலாம்.
Similar News
News October 15, 2025
நீலகிரியில் தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

நீலகிரி மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)
News October 15, 2025
நீலகிரி: பேரூராட்சிகளின் புதிய உதவி இயக்குநர்

நீலகிரி மாவட்ட பேரூராட்சிகள் புதிய உதவி இயக்குநராக மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும், மணிகண்டன் தனது அரசுப் பணியை கடைநிலை பதவியில் தொடங்கியவர். சிறப்பாக பொதுமக்களுக்கு பணியாற்றுபவர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
News October 15, 2025
நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் 50% மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தில் பயன்பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .