News March 22, 2024
பத்திரிகையாளர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு

மக்களவை தேர்தலில் அலுவலகப் பணி காரணமாக அரசு அங்கீகார அட்டை மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலை உள்ளது. இவர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும்.
Similar News
News November 8, 2025
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்திமணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது கைபேசி விபரங்கள் மாநகர காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News November 8, 2025
பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE
News November 8, 2025
நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.


