News March 19, 2025
பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
மன அமைதியை கொடுக்கும் செங்கண்மாலீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூருக்கு 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவராக செங்கண்மாலீஸ்வரர் உள்ளார். இக்கோயில் 3 ஆம் நூற்றாண்டில் முற்கால சோழப் பேரரசர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்று, மன அமைதியைப் பெற இக்கோயில் ஒரு சிறந்த இடமாகும். மன அழுத்தம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
JUST NOW: மாவட்டக்கல்வி அலுவலர் நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை 25 மாவட்டக்கல்வி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி செங்கல்பட்டு(மதுராந்தகம்) இடைநிலை மாவட்டக்கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த கே.காளிதாஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.