News March 6, 2025
பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி பானுமதி இவர்களது மகள் தரணி ஸ்ரீ வயது (15 ) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் சக தோழிகள் ஐந்து பேர் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News March 6, 2025
பள்ளிகள் அருகில் புகையிலை -136 கடைகளுக்கு சீல்

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 136 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகளில் இருந்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்பிலான 251 புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூபாய் 42.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 6, 2025
சேலம் மார்ச்.6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மார்ச் 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9:30 மணி செவ்வாய்பேட்டையில் பாஜக கையெழுத்து இயக்கம் ஆரம்பம். ▶️காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா ▶️காலை 10 மணி விஸ்வ இந்து பரிசத் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் ▶️காலை 11 மணி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்திப்பு கூட்டம்.
News March 6, 2025
சேலத்தில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 08.03.2025 அன்று ஆத்தூர் தேவியாகுறிச்சி தாகூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.