News March 28, 2025
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கலக்டர் வாழ்த்து

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 28.3.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 22,022 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் சிறப்பான முறையில் அனைத்து மாணவர்களும் தேர்வை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், படித்ததை நினைவுடன் எழுத கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Similar News
News March 30, 2025
குமரியில் பைக் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை

குமரியில் சமீபகாலமாக இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி மக்களை அச்சுறுத்தம் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். *சாகசம் செய்வோருக்கு பகிர்ந்து அறிவுரை கூறுங்கள்*
News March 30, 2025
குமரி-மும்பை இடையே சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

மும்பை-குமரி இடையே, கோடை கால சிறப்பு ரயில் ( ரயில் எண் : 01005) ஏப்ரல் 9 அன்று மும்பையில் இருந்து 00:30 கிளம்பி ஏப்ரல் 10 அன்று 1:15 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். மும்பை, தாதர், புனே, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக குமரி வந்தடையும். இந்நிலையில, இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. *தேவைபடுவோர் மறக்காம முன்பதிவு பண்ணிக்கோங்க
News March 30, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச்.30) 29.00 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.