News December 6, 2024
பதுவையில் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Similar News
News September 18, 2025
காரைக்கால்: குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம் திறப்பு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் அமைச்சர் நமச்சிவாயமும் இன்று துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வீடியோ காணொளி மூலமாக காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
News September 18, 2025
புதுச்சேரி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை

வானிலை ஆய்வு மையம் வெளிட்ட அறிக்கையில் தெற்கு வங்ககடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சட்டப்பேரவையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
News September 18, 2025
புதுச்சேரி சட்டபேரவை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரியில் இன்று 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து கூட்டத்தை துவங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுச்சேரியில் தொழில் துவங்குவதை எளிமையாக்குவது குறித்த மசோதா மற்றும் காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளன.