News March 21, 2025
பதவியை தூக்கி எறிய தயார் – பண்ருட்டி எம்.எல்.ஏ. ஆவேசம்!

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சட்டமன்றத்தில் தொடர்ந்து மக்களுக்காக பேசுவேன் என்றும், என்னுடைய இயல்பும் இதுதான் என்றும், இது இடையூறாக இருப்பதாக் கருதினால் தனது பதவியை தூக்கி எறியவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் mhc.tn.gov.in/recruitment எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…
News April 15, 2025
கடலூரில் வேலை வாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 17/4/2025 வியாழக்கிழமை அன்று கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற உள்ளது.
News April 15, 2025
நீரில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோயில் அருகே வடக்கு கொளக்குடியில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என கூறப்பட்டுள்ளது.