News March 28, 2024
பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் அணிவகுப்பு

திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
Similar News
News August 15, 2025
திருப்பூர்: பஸ்ஸில் லக்கேஜை மறந்தால் என்ன செய்வது?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
News August 15, 2025
திருப்பூர் மக்களே..கவனமா இருங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. திருப்பூர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 14, 2025
திருப்பூர்: பஸ் ஸ்டாண்டிற்க தீரன் சின்னமலை பெயர்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.