News December 10, 2024

பதக்கங்களை வென்ற காஞ்சிபுரம் மாணவர்கள்

image

இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டி ஆரணியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 35 பேர், கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டி 7 பிரிவுகளில் நடந்தது. இதில், மொத்தம் 35 பதக்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை காஞ்சிபுரம் மாணவர்கள் வென்றனர். Way2News சார்பில் வாழ்த்துக்கள்.

Similar News

News August 16, 2025

காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

காஞ்சிபுரத்தில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை (1800 599 01234, 9445000413, 9444964899) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 16, 2025

காஞ்சிபுரம் மாவட்ட மது பிரியர்கள் கவனத்திற்கு

image

மது கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மது பாட்டில் விற்கப்படும்போது, MRP விலையுடன் கூடுதலாக ரூ.10 சேர்த்து வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும் ரூ.10 திரும்ப வழங்கப்படும். எனவே, மது அருந்துபவர்கள் அதை கீழே வீசிவிட்டு செல்லாதீர்கள். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!