News March 21, 2026

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

புதன் பகவான் இன்று முதல் கும்ப ராசியில் நேர்கதியில் பயணிப்பதால் 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: திடீர் பண வரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு. *ரிஷபம்: முதலீடு, பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறலாம். *மிதுனம்: பணியில் சம்பள உயர்வு கிடைக்கும். *கும்பம்: குடும்பத்தில் ஆதரவு பெருகும். எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். *மீனம்: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

Similar News

News April 8, 2026

ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு: EPS

image

வேளச்சேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து EPS பிரசாரம் செய்தார். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்களே செய்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், ‘ஸ்டாலின் சார் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு’ என பெண்கள் கிண்டல் செய்யும் அளவில்தான் திமுக ஆட்சி இருந்ததாக விமர்சித்தார். மேலும், தீயசக்தி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் எனவும் ஆவேசமாக கூறினார்.

News April 8, 2026

தென்மாநில உரிமைக்கு உலை வைக்கும் பாஜக: ஸ்டாலின்

image

தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு ரகசியம் காப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கிடையே அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம் என்றும் கேட்டுள்ளார். தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் திட்டத்தை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளார்.

News April 8, 2026

தமிழ்நாட்டில் தங்கம் பூமிக்கு அடியில் கிடைத்தது எப்போது?

image

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியிலிருந்து எப்போது முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876-ல் தான் ஆங்கிலேயர் காலத்தில் முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பழங்கால ஈமச்சடங்கு சார்ந்த தங்கம், பெரும் ஈமக்காடு (Megalithic Burial Site) ஆகியவை கிடைத்தது. அது பற்றிய ஆய்வுகள் இப்போதும் தொடர்கின்றன.

error: Content is protected !!