News November 9, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

செவ்வாய் பகவான் டிச.7-ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழில், வேலையில் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். *விருச்சிகம்: மகிழ்ச்சி, செழிப்பை அனுபவிப்பீர்கள். நிதி ஆதாயங்களை பெறலாம். பழைய கடன்கள் தீரும். *மகரம்: தொழிலில் மகத்தான வெற்றியை பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
Similar News
News November 10, 2025
வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ டிராப்பா?

வெற்றிமாறன், சூர்யா இணையும் வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றனர். ஆனால் கவினின் ‘மாஸ்க்’ பட விழாவில் வெற்றிமாறன் பேசியதை வைத்து பார்க்கையில், ‘வாடிவாசல்’ டிராப் ஆகிவிட்டதோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி. இசையமைத்த ‘கண்ணு முழி’ என்ற பாடலை, மாஸ்க்கில் பயன்படுத்திவிட்டதாக அவர் மேடையில் கூறியதே இதற்கு காரணம்.
News November 10, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் நாளை முதல் பள்ளிகளில் தொடங்க உள்ளன.
News November 10, 2025
தேர்தலுக்கு பிறகு SIR பணியை மேற்கொள்ள வேண்டும்: கமல்

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மேற்கொள்வதன் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என கேட்டுள்ளார். அவசரம் அவசரமாக இப்பணியை மேற்கொள்ளாமல், 2026 தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


