News January 30, 2026
பண்ருட்டி விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராஜேந்திரன் என்ற விவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன கூறியுள்ளார்.
Similar News
News January 30, 2026
பண்ருட்டி விவசாயி மீது தீ வைப்பு: இ.பி.எஸ் கண்டனம்

‘பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’ என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

கடலூர் மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
கடலூர்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி!

இளைஞர் விளையாட்டு திருவிழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை(ஜன.31) கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 14 ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் நேரடியாக கலந்து கொள்பவர்கள் <


